/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலை ஒட்டி மின் மாற்றி விபத்து அபாயத்தில் பக்தர்கள்
/
கோவிலை ஒட்டி மின் மாற்றி விபத்து அபாயத்தில் பக்தர்கள்
கோவிலை ஒட்டி மின் மாற்றி விபத்து அபாயத்தில் பக்தர்கள்
கோவிலை ஒட்டி மின் மாற்றி விபத்து அபாயத்தில் பக்தர்கள்
ADDED : ஜூன் 30, 2025 04:12 AM

ஜல்லடியன்பேட்டை,:ஜல்லடியன்பேட்டையில், கோவிலை ஒட்டி அமைந்துள்ள மின்மாற்றியால், பக்தர்கள் பீதியுடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டை, ஆஞ்சநேயர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலை ஒட்டி, உயர் அழுத்த மின்மாற்றி உள்ளது. இதனால், எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளதால், பக்தர்கள் பீதியுடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
இது குறித்து, பக்தர் ஒருவர் கூறியதாவது:
கோவிலை ஒட்டி, எட்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றி பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அடிக்கடி பழுது ஏற்பட்டு, வெடிச்சத்தத்துடன் தீப்பொறி உருவாகி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில், மின் மாற்றி வெடித்து, தீப்பொறி வேகமாக விழுந்தது. மின் வாரியத்துக்கு போனில் புகார் அளித்ததும், அவர்கள் வந்து உடனடியாக சரி செய்தனர்.
இதை, வேறு இடத்தில் மாற்றி அமைக்க, கவுன்சிலர், மின் வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின் மாற்றியை, வேறு இடத்தில் மாற்றி அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.