/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : டிச 31, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், சிறுவாபுரி கோவில் அமைந்துள்ள பகுதி முழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள தரிசன வரிசையில், நான்கு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். ஆரணி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.