/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஜன 05, 2026 06:04 AM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் முருகனை தரிசிக்க ஒன்றரை மணி நேரமானது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், தனுர் மாதத்தை ஒட்டி, நேற்று அதிகாலை 2:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு தனுர் மாத பூஜையுடன் மூலவரை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று கடும் பனிப்பொழிவு இருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
குறிப்பாக, மேல்மருவத்துார் செல்லும் பக்தர்கள் செவ்வாடை அணிந்து அதிகம் வந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி, தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

