/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
/
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
UPDATED : நவ 14, 2024 05:38 PM
ADDED : நவ 14, 2024 05:34 PM

சென்னை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டு உள்ள டிஜிபி சங்கர் ஜிவால், தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் என்ற இளைஞரை கைது செய்தனர். இதனையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனைகளின் பாதுகாப்பு தொடர்பாக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
*அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
*மருத்துவமனைகளில் தாக்குதல் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கூடுதல் ரோந்து போலீசாரை நியமித்து அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்க வேண்டும்.
*பாதுகாப்பு தொடர்பாக போலீசாருடன் மருத்துவமனை டீன்கள் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் டிஜிபி கூறியுள்ளார்.