/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை இயந்திர குழியில் மனிதர்களை இறக்கியதா சி.எம்.டி.ஏ.?
/
பாதாள சாக்கடை இயந்திர குழியில் மனிதர்களை இறக்கியதா சி.எம்.டி.ஏ.?
பாதாள சாக்கடை இயந்திர குழியில் மனிதர்களை இறக்கியதா சி.எம்.டி.ஏ.?
பாதாள சாக்கடை இயந்திர குழியில் மனிதர்களை இறக்கியதா சி.எம்.டி.ஏ.?
UPDATED : செப் 19, 2024 05:19 AM
ADDED : செப் 19, 2024 12:33 AM

சென்னை, கோயம்பேடு உணவு தானிய கிடங்கு மார்க்கெட்டில் பாதாளச் சாக்கடை இயந்திர குழியில், மனிதர்களை இறக்கி அடைப்பை சீர்செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு உணவு தானிய கிடங்கு மார்க்கெட்டில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்காக பயன்படுத்தப்படும் இயந்திர வாகனம், முறையான பராமரிப்பில்லாமல் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால், உயர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி, மனிதர்களை பாதாள சாக்கடையில் இறக்கி சி.எம்.டி.ஏ., நிர்வாகம் சீரமைத்துள்ளது. இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
'பாதாளச் சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில், நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம், மீண்டும் மனிதர்களை பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மார்க்கெட் முழுதும் பராமரிப்பு பணியை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தான் மேற்கொண்டு வருகிறது' என்றனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., தலைமை நிர்வாக அலுவலர் சிவஞானம் கூறுகையில், ''பாதாள சாக்கடைக்குள் யாரையும் இறக்குவதில்லை. தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தற்போது வெளியாகி உள்ள வீடியோ குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோயம்பேடு உணவு தானிய கிடங்கு மார்க்கெட்டில், பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க மனிதர்களை பயன்படுத்தும் சி.எம்.டி.ஏ., நிர்வாகம்.

