/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பேருந்தில் இருந்து கழன்று விழுந்த 'டீசல் டேங்க்'
/
மாநகர பேருந்தில் இருந்து கழன்று விழுந்த 'டீசல் டேங்க்'
மாநகர பேருந்தில் இருந்து கழன்று விழுந்த 'டீசல் டேங்க்'
மாநகர பேருந்தில் இருந்து கழன்று விழுந்த 'டீசல் டேங்க்'
ADDED : நவ 03, 2024 07:38 AM

சென்னை: பிராட்வேயில் இருந்து கோவளம் நோக்கி சென்ற சாதாரண கட்டண பேருந்தில், நேற்று 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்து மெரினாவை கடந்து நொச்சிகுப்பம் சர்வீஸ் சாலை வழியாக செல்லும் போது, திடீரென டீசல் டேங்க் கழன்று விழுந்தது.
சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பயணியர் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். பின், மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து பயணியரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, டீசல் டேங்க் கழன்று விழுந்த பேருந்தை, அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில், 30 சதவீதம் பழைய பேருந்துகளாகவே உள்ளன. இவற்றில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகின்றன. இதனால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.