/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டவர் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம்
/
டவர் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம்
ADDED : ஏப் 17, 2025 12:00 AM
அண்ணா நகர் அண்ணா நகர், மூன்றாவது பிரதான சாலையில், 15.5 ஏக்கர் பரப்பளவில், அண்ணா 'டவர்' பூங்கா எனும் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா உள்ளது.
இங்கு, சிறுவர்கள் பொழுது கழிக்க வசதியாக உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தினம், முதியோர், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
கோடை விடுமுறை என்பதால், ஏராளமான குடும்பத்தினர், காதலர்கள் வரும் சூழலில், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
பூங்காவிற்கு வரும் ஜோடிகளிடம் கத்தியை காட்டி வழிப்பறி, ஆபாசமாக பேசி வீண் தகராறு செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இம்மாதத்தில் இதுவரை இரண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளன.
இதில், காதலுடன் வந்த இளம்பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஏழு பேர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால், பூங்காவிற்கு வருவோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அண்ணா நகர் போலீசார், விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.