/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுடுகாட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு

ADDED : ஜன 18, 2025 12:28 AM

சேலையூர்தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், 65வது வார்டில், அம்பேத்கர் நகர் சுடுகாடு உள்ளது. சேலையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.
சுடுகாட்டை ஒட்டி, பாதாள சாக்கடை உந்து நிலையம் உள்ளது. இந்த உந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, சுடுகாட்டில் விடுகின்றனர். இதனால், சுடுகாட்டில் கிறிஸ்துவ மக்களுக்கான பகுதியில், ஆறு மாதங்களுக்கு மேல் கழிவுநீர் தேங்கியுள்ளது.
குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளதால், உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுடுகாட்டில் 4 அடி உயரத்திற்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் உள்ளது.
இதனால், பாம்புகள், விஷ ஜந்துகள் அதிகளவில் சுற்றித்திரிவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இப்படியே போனால், கழிவுநீர் மண்ணில் ஊறி, சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டுவிடும்.
எனவே, மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, சுடுகாட்டில் கழிவுநீர் விடுவதை தடுத்து, முறையாக சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.