/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டிஜி யாத்ரா' சேவை சீராக நடவடிக்கை
/
'டிஜி யாத்ரா' சேவை சீராக நடவடிக்கை
ADDED : ஏப் 10, 2025 11:43 PM
சென்னை, பயணியர் விமான நிலைய புறப்பாடு நுழைவு வாயிலில், அரசு அடையாள ஆவணங்களை, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும். சில சமயம் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாவதால், 'போர்டிங் பாஸ்' பெற நேரமாகிவிடும்.
இவற்றை எளிதாக்க, மத்திய அரசு , 'டிஜி யாத்ரா' என்ற வசதியை, சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் செயல்படுத்தி உள்ளது.
ஆனால், சென்னையில் இந்த சேவை அடிக்கடி பயன்படுத்த முடியாமல் போவதாக புகார் எழுகிறது.
இந்நிலையில், சேவை பாதிக்காத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை ஏர்போர்ட் ஐ.டி., பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:
டிஜி யாத்ரா செயலி சேவைக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து, மற்ற இடங்களுக்கு செல்வோர், இவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும், சில நேரங்களில் நுழைவுவாயிலில் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார்கள் வருகின்றன. அவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பயணத்திற்கு ஒருநாள் முன், செயலியில் டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்ற வேண்டும். அப்படி செய்யாமல், நேரடியாக ஸ்கேனரில் காண்பிக்கும்போது ,அனுமதி மறுக்கப்படும்.
சிலரது அரசு அடையாள அட்டையில் உள்ள முகம், சிலநேரம் செயலியில் ஒத்து போகாது. அதற்கும் ஸ்கேனரில் அனுமதி கிடைக்காது.
எனவே, மீண்டும் உள்நுழைந்து முயற்சித்தால் சரியாகிவிடும்.
இந்த பிரச்சனைகளை குறைக்க, தனி ஊழியர்களை நியமிக்க உள்ளோம். வரும் நாட்களில் இது போன்ற சிக்கல்கள் வராது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

