/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' கிண்டியில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்
/
'தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' கிண்டியில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்
'தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' கிண்டியில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்
'தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' கிண்டியில் உற்சாகத்தில் அதிர்ந்த அரங்கம்
ADDED : பிப் 02, 2026 05:42 AM

கிண்டி: கிண்டியில் நடந்த 'தினமலர் - கார்னிவல்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடினர்.
'தினமலர்' நாளிதழ், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.
அந்த வகையில், கிண்டி, திரு.வி.க., இண்டஸ்டீரியல் எஸ்டேட், பார்த்தசாரதி கோவில் தெருவில் உள்ள, 'வி.ஜி.என்., பேர்மாண்ட்' அப்பார்ட்மென்டில், நேற்று பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழுடன் 'காசா கிராண்ட்' நிறுவனம் கைகோர்த்தது. உடன், ஏ.சி.டி., பைபர்நெட், கிட்டீ பட்டீ, சி.எஸ்.பி., வங்கி, எம்.ஜி.எம்., டிஸீ வேர்ல்டு, பெப்ஸ் இந்தியா பேவரெட் ஸ்ப்ரிங் மேட்ரிஸ், தனிஷ்க் ஜுவல்லரி -- அய்யப்பன்தாங்கல், சென்னை குல்பி, மயில் பிராண்ட் பூஜை மற்றும் ஹோம் கேர் புராடக்ட்ஸ், வெல்லோரா கிச்சன், தமீம் ஈவன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சிறப்பு சேர்த்தன.
பெண்கள், சிறார்கள் மற்றும் குழந்தைகள் என தனித்தனியாக நடந்த போட்டிகளில், அவரவர் திறமைகளை வெளிக்காட்டினர். குறிப்பாக, மினி மாரத்தான், ஸ்லோ சைக்கிளிங் என, அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, பரிசு பொருட்களை தட்டிச் சென்றனர்.
பெண்கள், விதவிதமான கோலங்களை போட்டு, குடியிருப்பையே வண்ணமயமாக்கினர். அதை தொடர்ந்து நடந்த, மேஜிக் ஷோவை பிரம்மிப்புடன் கண்டதுடன், சினிமா பாடல்களுக்கு உற்சாக குத்தாட்டம் போட்டு அரங்கையே அதிர செய்தனர்.
அப்பார்ட்மென்ட் கொண்டாட்டத்தில் பெரியவர்களும், குழந்தைகளாக மாறி மகிழ்ந்தனர். மீண்டும், மீண்டும், 'தினமலர்' உடன் இணைந்து நாங்கள் கொண்டாட உள்ளோம். - கார்த்திக், 44, குடியிருப்பு சங்க செயலர்.
வார விடுமுறையை நன்றாக அனுபவித்து மகிழ்ந்தோம். மேஜிக் ஷோ, ஸ்லோ சைக்கிளிங் போட்டிகள் என்னை மிகவும் கவர்ந்தன. 'சன்டே பன் டே'வாக மாறியது. - நாகமீனா.
போட்டிகள் அனைத்திலும் ஆர்வமுடன் பங்கேற்றேன். அதில், கோலப்போட்டியில் நான் முதல் பரிசை பெற்றேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான நாளாக அமைந்தது. - சாய் ஜனனி.

