/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி- சைதையில் பயன்பாட்டுக்கு வந்தது நாட்டு நாய்கள் பாதுகாப்பு மையம்

ADDED : ஜூலை 06, 2025 12:13 AM
சென்னை நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சைதாபேட்டையில் திறக்கப்படாமல் இருந்த, நாட்டு இன நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு கால்நடை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், 11,773 சதுர அடியில், உள் நாட்டு இன நாய் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வந்தது.
கட்டுமான பணிகள் மார்ச் மாதம் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என, கால்நடை அதிகாரிகள், டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், கட்டுமான பணிகள் நிறைவடையாமல் இழுபறியாக இருந்து வந்தது. இதுகுறித்து, ஜூன் 16ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், உள் நாட்டு இன நாய்கள் பாதுகாப்பு மைய கட்டட பணிகள் விரைவாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று, பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்தார்.
இதுகுறித்து, செல்லபிராணிகள் வளர்ப்போர் கூறியதாவது:
நாட்டு இன நாய் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் பயன்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தோம். தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
விரைவில் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு இன நாய்களை இனப்பெருக்கம் செய்து, விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு செய்தால், உள் நாட்டு இன நாய்களை வளர்க்க விரும்புவோரின் அதீத ஆசை நிறைவேறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***