/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி : ஓ.எம்.ஆரில் கழிவுநீரால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

ADDED : ஜூன் 13, 2025 12:42 AM

அடையாறு, மயிலாப்பூரில் இருந்து, மத்திய கைலாஷ் வழியாக எஸ்.ஆர்.பி.டூல்ஸ் கழிவு நீரேற்று நிலையத்திற்கு, 2,000 மி.மீ., குழாய் செல்கிறது. இந்த குழாய், ஓ.எம்.ஆரில் பதிக்கப்பட்டுள்ளது.
டைடல் பார்க் சந்திப்பில் உள்ள, ஐ.டி., நிறுவனங்களின் கழிவுநீர் இணைப்புகள், இந்த பிரதான குழாயில் இணைக்கப்பட்டுள்ளன.
பத்து நாட்களாக, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் கழிவு நீரேற்று நிலைய பணி தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, ஓ.எம்.ஆரில் பதித்துள்ள குழாயில் நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது.
இதனால், ஓ.எம்.ஆர்., திருவான்மியூர் எல்.பி., சாலை மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலைகளில், நேற்று முன்தினம், 2 கி.மீ., துாரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஐ.டி., நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, லாரியில் அகற்றவோ அல்லது மாற்று பாதை குழாய் வழியாக கொண்டு செல்லவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து நேற்று, நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவு நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பழுது உடனடியாக சீரமைக்கப்பட்டது.
மேலும், ஐ.டி., நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்காத கழிவுநீரை, பிரதான குழாயில் விடுவது நிறுத்தப்பட்டது. அதையும் மீறி, கழிவுநீர் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சாலையில் கழிவுநீர் வடிந்து ஓடுவது நின்றது. வாகன போக்குவரத்தும் சீரானது.