ADDED : பிப் 16, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடி தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 3ம் தேதி நள்ளிரவு, கோவில் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர், கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடி தப்பினார்.
திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், கோடங்கிபட்டியைச் சேர்ந்த சரவணகுமார், 35, என்பது தெரிய வந்தது.
கொத்தனார் வேலை செய்து வரும் இவர், கோவில் உண்டியலை உடைத்து 35,000 ரூபாயை திருடி, நெற்குன்றம் பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி, செலவு செய்து தலைமறைவானது தெரியவந்தது.
அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
