ADDED : மார் 13, 2024 12:38 AM
அ நிறம் | அளவு
சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் கூட்ட செயல்பாடுகளை கண்டு கடும் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து,அவர்கள் கூறுகையில், 'சென்னை கலெக்டர் தலைமையில், ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது.
'இக்குழுவின் விதிப்படி, உயர்மட்ட அதிகாரிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் வர வேண்டும். ஆனால், அவர்கள் யாரும் வராமல், கீழ்மட்ட அலுவலர்களை வைத்து, கண்துடைப்புக்காக இக்கூட்டம் நடந்தது' என்றனர்.
