தீப்பற்றி எரிந்த குடிசை மாற்றுத்திறனாளி சிறுவன் பலி
தீப்பற்றி எரிந்த குடிசை மாற்றுத்திறனாளி சிறுவன் பலி
ADDED : ஜன 11, 2026 05:34 AM

மதுராந்தகம்: படாளம் அருகே புளிப்பரக்கோவில் பகுதியில், குடிசை தீப்பற்றி எரிந்ததில், உள்ளே இருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கருகி பலியானார்.
மதுராந்தகம் அருகே படாளம் ஊராட்சிக்கு உட்பட்ட புளிப்பரக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் சின்னபொண்ணு, 72.
இவருடன், வாய் பேச முடியாத மற்றும் பார்வை திறன் குறைபாடு உடைய, இவரது பேரன் திவேஷ், 15, வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று, சின்னபொண்ணு கூலி வேலைக்குச் சென்ற நிலையில், திவேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை 11:30 மணியளவில், குடிசை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மதுராந்தகம் தீயணைப்புத் துறைக்கும், படாளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், குடிசை வீட்டில் இருந்த மாற்றுத் திறனாளி சிறுவன் திவேஷ், தீயில் கருகி பலியானார்.
அவரது உடலை மீட்ட படாளம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
