/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரோடு ரோலரில் சிக்கி மாற்றுதிறனாளி பலி பணிகளை தொடர ஒப்பந்ததாரருக்கு தடை
/
ரோடு ரோலரில் சிக்கி மாற்றுதிறனாளி பலி பணிகளை தொடர ஒப்பந்ததாரருக்கு தடை
ரோடு ரோலரில் சிக்கி மாற்றுதிறனாளி பலி பணிகளை தொடர ஒப்பந்ததாரருக்கு தடை
ரோடு ரோலரில் சிக்கி மாற்றுதிறனாளி பலி பணிகளை தொடர ஒப்பந்ததாரருக்கு தடை
ADDED : செப் 08, 2025 06:16 AM
கோயம்பேடு: ரோடு ரோலரில் சிக்கி மாற்றுத்திறனாளி பலியான விவகாரத்தில், ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தொடர்புடைய ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி தடை விதித்துள்ளது.
கோயம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராஜ், 55; மாற்றுத்திறனாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:45 மணியளவில், மனைவி சாந்தலட்சுமியுடன், அதேபகுதியில் உள்ள சிவன் கோவில் தெரு, வடக்கு மாட விதியில் நின்றிருந்தார்.
அப்போது, சாலையோரம் நின்ற ரோடு ரோலரை, ஓட்டுநர் வெங்கடேசன் இயக்கியபோது, கட்டுபாட்டை இழந்து, பாஸ்கர் ராஜ் மீது ஏறி இறங்கியதில் பலியானார். இந்த விவகாரத்தில், 127 வது உதவி பொறியாளர் வீரராகவன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதிற்கிடையில், ஒப்பந்ததாரர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உதவி பொறியாளர் வீரராகவன், கோயம்பேடு போலீசில் புகார் அளித்திருந்தார்.
தப்பியோடிய திருவண்ணாமலையை சேர்ந்த வெங்கடேசன், 21, என்பவரை, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
பணிகளை கவனக்குறையுடன் மேற்கொண்ட கொளத்துாரை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜிக்கு, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதில், 'ஒப்பந்தவிதிகளின்படி, பணியிடத்தில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க தவறியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதுடன், மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
'மேலும், ஒப்பந்ததாரருக்கு வழங்கிய மூன்று பணிகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.