ADDED : ஜன 26, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 97வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை இரவு, 'காஷ்மீர் சைவிசத்தின் உணர்வு சக்தி' எனும் தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. எழுத்தாளரும், ஆராய்ச்சியாருமான விஜய் ஹஷ்யா சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு - -டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
அதன்படி, நாளை இரவு 7:00 மணிக்கு, 97வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி, பேஸ்புக், யு-டியூப், எக்ஸ்' தளத்தின் வாயிலாகவும் பார்க்க முடியும்.

