
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் பாரதி திருமுகன் - வில்லுப்பாட்டு, துஷ்யந்த் ஸ்ரீதர் - சங்கீத உபன்யாசம், உடையாலுார் கல்யாணராம பாகவதர் - நாமசங்கீர்த்தனம், நாகை முகுந்தன், டாமல் பெருந்தேவி, டாமல் ராமகிருஷ்ணன் - சொற்பொழிவு, சுதா சேஷய்யன் - சொற்பொழிவு மற்றும் இலக்கியப் படைப்புகள் மற்றும் பி.சுந்தர்குமார் - உரையாடல் ஆகியோருக்கு, 'ராம பக்தி பிரசார மணி' என்ற பட்டத்தை, அஹோபில மடத்தின் 46வது பீடாதிபதி ஸ்ரீவன் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமி வழங்கினார்.
கே.கே.முஹம்மது மற்றும் மறைந்த டாக்டர்.ஆர்.நாகஸ்வாமி ஆகியோருக்கு, ராமர் கோவில் வழக்கில் தொல்பொருள் ஆதாரங்களைத் திரட்டியதற்காக, 'பிரத்ன கீர்த்தி பிரசார மணி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இடம்: சாஸ்த்ரா சத்சங்க வளாகம், கோடம்பாக்கம்.

