UPDATED : பிப் 13, 2024 05:52 PM
ADDED : பிப் 13, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 70வது வார்டில், பாரதி இரண்டாவது தெருவில் குப்பை கழிவுகள் ஆங்காங்கே குவியலாக காணப்படுகின்றன. இதனருகே உள்ள மற்ற தெருக்களில், குப்பை அள்ளும் பணி தொய்வில்லாமல் நடக்கும் நிலையில், இங்கு மட்டும் பாரபட்சம் காட்டுகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், உடனே அகற்றப்படும் எனக் கூறுகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல், இப்பகுதியில் தனியார் பள்ளி எதிரே உள்ள சாய்ந்த மரத்தால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அதை அப்புறப்படுத்தவும் கோரினோம். எந்த பலனுமில்லை.
- பாரதி நகர்வாசிகள்.