sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்

/

மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்

மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்

மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்


ADDED : நவ 16, 2024 12:44 AM

Google News

ADDED : நவ 16, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டூர்புரம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோட்டூர்புரம், வித்யாசாகர் மன வளர்ச்சி மாற்றுத்திறனாளி பள்ளி, நிழல் மற்றும் யங் இந்தியா ஆகிய அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியை, 170வது வார்டு கவுன்சிலர் கதிர்முருகன் துவக்கி வைத்தார். கோட்டூர்புரத்தில் உள்ள, பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும், ஏ.பி.சி.டி., பூங்காவில், மன வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் மரக்கன்றுகள் நட்டனர்.

இதில் மன வளர்ச்சி மாற்றுத்திறனாளிகளை தயக்கமின்றி அணுகுவது, கலந்துரையாடுவது, அவர்களின் தனித்திறனை ஏற்றுக்கொள்வது, பிறரிடம் பகிர்வது குறித்து, அமைப்பினர் பேசினர். பொதுமக்களுடன், குழந்தைகளை கலந்துரையாட வைத்தனர்.

மன வளர்ச்சி குழந்தைகளுடன் கலந்துரையாடியது புதிய அனுபவத்தை கொடுத்தது என, பொதுமக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us