ADDED : அக் 24, 2024 12:19 AM
அ நிறம் | அளவு
சென்னை, அசென்னையில் சமீபத்தில் பெய்த மழை பாதிப்பின்போது திறம்பட பணியாற்றிய துாய்மை பணியாளர்களை பாராட்டிய தமிழக முதல்வர், கொளத்துார் தொகுதியில் கடந்த 17ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 600 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பிரியாணி விருந்து வைத்து, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார்.
மழை பாதிப்பின்போது, துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தினர், மின்வாரியத்தினர் என பலரும், மழை, வெள்ளம் பாராது மக்கள் பணியாற்றினர். இதில் முதல்வர் அளித்த விருந்தில் துாய்மை பணியாளர்கள் மட்டுமே கவனிக்கப்பட்டதால், மற்ற துறை பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
