/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூரில் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தி
/
திருநின்றவூரில் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தி
திருநின்றவூரில் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தி
திருநின்றவூரில் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தி
ADDED : ஏப் 22, 2025 12:48 AM
திருநின்றவூர்,
அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து மின் பரிமாற்ற கோபுரம் வாயிலாக, திருநின்றவூருக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த 19ம் தேதி நள்ளிரவு, நெமிலிச்சேரி, ராமாபுரத்தில் உள்ள 110 கி.வா., திறன் உடைய மின் பரிமாற்ற கோபுரத்தின் 'ஜம்பரில்' பழுது ஏற்பட்டது.
இந்த பிரச்சனையால், ஐந்து மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. கொரட்டூரில் இருந்து மின் வாரிய ஊழியர்கள் வந்து, பழுதை சரி செய்த பின், அதிகாலை 5:00 மணிக்கு பின் மின்சாரம் வினியோகமானது.
இந்நிலையில், திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு, நேற்று முன்தினம் மீண்டும், இரவில் ஐந்து முறை மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தினங்களாக, பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால், அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருநின்றவூர், நெமிலிச்சேரி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில், இரவு நேர மின்வெட்டு தொடர்கதையாகி உள்ளது. இதனால், 50,000க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர், இரவு நேர புழுக்கத்தில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் சாதனங்களின் பயன்பாட்டால் மின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யும்விதமாக திருநின்றவூரில் எட்டு, 'மெகா வோல்ட் ஆம்பியர்கள்' பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்' என்றனர்.