/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இயற்கை உரம் தயாரிக்கும் இடம் மூடிக் கிடப்பதால் அதிருப்தி
/
இயற்கை உரம் தயாரிக்கும் இடம் மூடிக் கிடப்பதால் அதிருப்தி
இயற்கை உரம் தயாரிக்கும் இடம் மூடிக் கிடப்பதால் அதிருப்தி
இயற்கை உரம் தயாரிக்கும் இடம் மூடிக் கிடப்பதால் அதிருப்தி
ADDED : பிப் 21, 2024 02:16 AM

கோடம்பாக்கம்:மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், டிரஸ்ட்புரம் பகுதியில் மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் இடம் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம், பூலியூர் பிரதான சாலையில், சென்னை மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் இடம் உள்ளது.
இங்கு, 112வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும், 'டன்' கணக்கிலான மட்கும் குப்பை கொண்டுவரப்படுகிறது.
இந்த குப்பையை திறந்தவெளியில் பதப்படுத்தி, உரம் தயாரிக்கும் பணி நடந்தது.
இதற்காக, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில், தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இங்கு குப்பை மட்டுமே குவிக்கப்பட்டு, பயன்பாட்டின்றி மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியாக இயற்கை உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.
இங்கு, வீட்டில் வளர்க்கும் பூ மற்றும் காய்கறி செடிகள் வளர்ப்போருக்கு இயற்கை உரம், கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத் தவிர்த்து, பெரிய அளவிலான பழக்கடைகளில் கிடைக்கும் கழிவுகள், 'பயோ காஸ்' தயாரிக்கும் கிடங்கிற்கு அனுப்பப்படுகின்றன.
குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இவ்வகையாக உரத்திற்கு, ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதை மாநகராட்சி முறையாக செயல்படுத்தாமலும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமலும் விட்டதால், பணிகளில் மந்தம் ஏற்பட்டது.
இதனால் தற்போது, பல இடங்களில் இந்த மையங்கள் பயன்பாடின்றி மூடப்பட்டன.
இதற்காக ஒதுக்கப்பட்ட பணியாளர்களை வேறு பணியில் ஈடுபடுத்துவதால், மக்களிடம் இத்திட்டம் பெரிய அளவில் கொண்டு சேர்க்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனித்து, இத்திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

