/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊழியர் இறப்பு இழப்பீட்டு தொகை சி.எம்.டி.ஏ., உயர்த்தாததால் அதிருப்தி
/
ஊழியர் இறப்பு இழப்பீட்டு தொகை சி.எம்.டி.ஏ., உயர்த்தாததால் அதிருப்தி
ஊழியர் இறப்பு இழப்பீட்டு தொகை சி.எம்.டி.ஏ., உயர்த்தாததால் அதிருப்தி
ஊழியர் இறப்பு இழப்பீட்டு தொகை சி.எம்.டி.ஏ., உயர்த்தாததால் அதிருப்தி
ADDED : மே 23, 2025 12:28 AM
சென்னை,தமிழகத்தில் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நலனுக்காக, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதில், பணி காலத்தில் ஒரு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டு வந்தது.
இதற்காக, ஒவ்வொரு ஊழியரின் மாத சம்பளத்தில், 60 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. கடந்த, 2021ல் இத்தொகையை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை, அனைத்து அரசு துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் அமல்படுத்தி வரும் நிலையில், சி.எம்.டி.ஏ., நிர்வாகம் இத்தொகையை உயர்த்த மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., ஊழியர்கள் கூறியதாவது:
ஒரு ஊழியர், பணி காலத்தில் இறப்பது என்பது எதிர்பாராதவிதமாக நடக்கும் துயரம். அதில், சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு அளிப்பது, மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் உதவியாக அமையும்.
தமிழக அரசு இத்தொகையை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்திய நிலையில், சி.எம்.டி.ஏ.,வில் மட்டும் தொடர்ந்து, மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு முறையீடுகள் செய்தும், உயர் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு தலையிட்டு, இந்த விஷயத்தில் ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.