/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 மண்டல கூட்டங்களை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர் மீது அதிருப்தி
/
6 மண்டல கூட்டங்களை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர் மீது அதிருப்தி
6 மண்டல கூட்டங்களை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர் மீது அதிருப்தி
6 மண்டல கூட்டங்களை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர் மீது அதிருப்தி
ADDED : ஆக 06, 2025 12:34 AM
சென்னை,அதிக வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதியில் உள்ள தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன், தொடர்ந்து ஆறு மண்டல குழு கூட்டங்களில் பங்கேற்காததால், வார்டு மக்கள் கூறும் பிரச்னைகள் மாநகராட்சியில் எதிரொலிக்கவில்லை என, அவர் மீது பகுதிமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அடையாறு மண்டலம், வேளச்சேரியின் ஒரு பகுதியில் உள்ள 177வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக மணிமாறன் உள்ளார். இவரது வார்டு பகுதியில் ஆண்டுதோறும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த மண்டல கூட்டத்தில் பங்கேற்ற மணிமாறனுக்கும், மண்டல குழு தலைவர் துரைராஜ், 176வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆனந்தம் ஆகியோரும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளை, மணிமாறன் ஒருமையில் பேசியதால், ஆனந்தன் அவரை கண்டித்தார். அதனால், 'இனிமேல் மண்டல கூட்டத்திற்கு வரமாட்டேன்' என கோபமாக பேசி, கூட்டத்தில் இருந்து மணிமாறன் வெளியேறினார்.
அது போல, பிப்., முதல் ஜூலை மாதம் வரை நடந்த மண்டல குழு கூட்டத்தில், உடல் நிலையை காரணம் காட்டி, மணிமாறன் பங்கேற்கவில்லை. இதனால், வார்டு மக்கள் கூறும் பிரச்னைகள், மாநகராட்சியில் எதிரொலிக்காததால், அவர் மீது பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வேளச்சேரி பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:
வேளச்சேரியில் டான்சி நகர், பெத்தேல் அவென்யூ, பாலமுருகன் நகர், தண்டீஸ்வரம் நகர் உள்ளிட்ட பகுதிகள், சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ளன. இப்பகுதியில் ஏதாவது பிரச்னை குறித்து கவுன்சிலர் மணிமாறனிடம் கூறுகிறோம். அவர், அதிகாரிகளிடமும், மண்டல கூட்டத்திலும் பேசுவதாக கூறி, சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்.
ஆனால் அவர், பிப்., மாதம் முதல் கவுன்சிலர் மண்டல கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். வேளச்சேரியில் உள்ள இதர கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர்.
ஆனால், 177வது வார்டு கவுன்சிலர் மணிமாறன் மட்டும் பங்கேற்பதில்லை. ஆனால், கட்சி உள்ளிட்ட இதர கூட்டங்களில் தினமும் பங்கேற்கிறார்.
ஓரிரு மாதங்களில் பருவமழை துவங்கிவிடும். அதற்கு முன், சாலை, வடிகால்வாய் பிரச்னையை சரி செய்ய வேண்டும். தினம் ஒரு தெருவில் குடிநீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசியும் வருகிறது. இப்பிரச்னையை யாரிடம் தெரிவிப்பது என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.