/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் கால்வாயான வடிகால் குடிநீர் வாரியம் மீது அதிருப்தி
/
கழிவுநீர் கால்வாயான வடிகால் குடிநீர் வாரியம் மீது அதிருப்தி
கழிவுநீர் கால்வாயான வடிகால் குடிநீர் வாரியம் மீது அதிருப்தி
கழிவுநீர் கால்வாயான வடிகால் குடிநீர் வாரியம் மீது அதிருப்தி
ADDED : அக் 23, 2024 12:56 AM

சென்னை,
பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்காமல், மோட்டாரை பயன்படுத்தி கழிவுநீரை மழைநீர் வடிகாலில் வெளியேற்றி வருவதால், பாந்தியன் சாலையில் சிறு மழைக்கே, குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட எழும்பூரில், பாந்தியன் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள சர்ச் அருகே உள்ள பாதாள சாக்கடையில், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல், குடிநீர் வாரியத்தினர் மோட்டார் அமைத்து, பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீரை மழைநீர் வடிகாலில் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், சாரல் மழை பெய்தால் கூட மழைநீர் வடியாமல், சாலையிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே, மழைநீர் வடிகாலை கழிவுநீர் கால்வாயாக மாற்றிய வாரியத்தினர் மீது, அப்பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.