/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி
/
அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி
அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி
அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணி கிடப்பில் போட்டதால் அதிருப்தி
ADDED : அக் 23, 2024 12:36 AM

திருவொற்றியூர்,
காசிமேடு மீன்பிடித் துறைமுகம், 1980ல் 570 படகுகளை கையாளும் வகையில், கட்டப்பட்டது. பின், 2,000 படகுகள் நிறுத்தும் அளவிற்கு, விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இடப்பற்றாக்குறை நிலவியது.
தீர்வாக, 2019ல், திருவொற்றியூர் குப்பம் கடல் பகுதியில், மீன்வளம் - நீர்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியான, 200 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடித்துறைமுகம் கட்டும் பணி துவங்கியது.
அதன்படி, 2,801 அடி துாரம் தென் கிழக்கு அலை தடுப்பு சுவர், 1,815 அடி துாரம் வடகிழக்கு அலை தடுப்பு சுவரும், 2,000 - 8,000 கிலோ எடையிலான பாறாங்கற்கள், நட்சத்திர கற்கள் பயன்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, படகுகள் பழுது பார்ப்பு பணிக்கான சாய்வுதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறியதாவது:
சூரை மீன்பிடித்துறைமுகத்தில், தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 330 அடி நீட்டிக்கப்பட வேண்டும். தடுப்பு சுவரின் நீளம் குறைவாக இருப்பதால், புயல், சூறாவளி, கடல் சீற்றத்தின் போது, அதிவேகத்தில் அலைகள் துறைமுகத்தினுள் புகுகின்றன.
அப்போது, படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பலத்த சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, 200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் சூரை மீன்பிடித் துறைமுகம், பயனில்லாமல் போய் விடும். உடனடியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை நீட்டிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'பரிசீலனையில் உள்ளது'
சூரை மீன்பிடித்துறைமுக பணிகள் பெரும்பாலும் முடிந்திருக்கும் நிலையில், படகுகள் பழுது பார்ப்பு பணிக்கான, சாய்வு தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் முடிய ஒரு மாதமாகி விடும். அதன்பின், துறைமுகம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு விடும்.
தென்கிழக்கு அலை தடுப்பு சுவர் நீட்டிக்கும் பணி, பரிசீலனையில் உள்ளது. நிதி ஆதாரங்கள் தெளிவான பின், இரண்டாம் கட்ட தொகுப்பு பணியாகவே, அந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மீன்வளத்துறை அதிகாரி

