தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேர்தல் பணியில் தொய்வு: அ.தி.மு.க.,க்குள் அதிருப்தி

 தேர்தல் பணியில் தொய்வு: அ.தி.மு.க.,க்குள் அதிருப்தி

 தேர்தல் பணியில் தொய்வு: அ.தி.மு.க.,க்குள் அதிருப்தி


ADDED : மார் 23, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர்: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அண்ணா நகர் தொகுதியில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள்கூட துவங்கப்படாமல் இருப்பது, கட்சிக்குள் அதிருப்தியை உருவாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் சூடு அதிகரிக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், வரும் 26ம் தேதிக்குள் சேரலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தங்கள் வாக்காளர்கள் யார் என்பதை அறிந்து வைத்துள்ள கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்கள், அப்பட்டியலில் உள்ளபடி வாக்காளர்கள் இருக்கின்றனரா, விடுபட்டுள்ளனரா என்பதை சரிபார்த்து வருகின்றனர்.

மற்ற கட்சிகளின் பிரமுகர்கள், வீடுதோறும் சென்று வாக்காளர் விபரங்களை சரிபார்த்து, புதிய பெயர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரகாட்டி வருகின்றனர். ஆனால், அண்ணா நகரில் அ.தி.மு.க., சார்பில், இந்த பணிகள் இன்னும் முழுமையாக துவங்கப்படவில்லை.

அக்கட்சியின், மாவட்டச் செயலர்களில் ஒருவர், இப்பணிகளை செய்ய எந்த உத்தரவு வழங்காததால், கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாக, அ.தி.மு.க.,வினரே வருந்துகின்றனர்.

கீழ்மட்ட கட்சியினர் ஆர்வமாக இருந்தும், இது போன்ற தாமதம், தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஓட்டு வித்தியாசத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும், கட்சியினரிடையே பேசு பொருளாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us