UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:44 PM

சென்னை: மாவட்ட அளவில் நடந்த பால் பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி இருபாலர் பிரிவிலும் முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
முதல்வர் கோப்பைக்கான செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பால் பேட்மின்டன் போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றன.
பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஐ.எஸ்.டி. ‘ஏ’ அணி 35 – 33, 35 – 22 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி., ‘பி’ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை அணி 3-வது இடத்தையும் பிடித்தன.
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஐ.எஸ்.டி. ‘ஏ’ அணி 35 – 29, 35 – 28 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி. ‘பி’ அணியை வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. முறையே, முறையே எஸ்.ஆர்.எம்., ‘பி’ மற்று ‘சி’ அணி அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.
