தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மடிப்பாக்கத்தில் மர்ம காய்ச்சல் "டெங்கு' பீதியில் மக்கள்

மடிப்பாக்கத்தில் மர்ம காய்ச்சல் "டெங்கு' பீதியில் மக்கள்

மடிப்பாக்கத்தில் மர்ம காய்ச்சல் "டெங்கு' பீதியில் மக்கள்


ADDED : நவ 08, 2012 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2012 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை புறநகரின், பல பகுதிகளில் மீண்டும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது 'டெங்கு'வாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம் - புழுதிவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை உள்ளிட்ட, பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை வசதியில்லை. பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் சங்கமிக்கிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் அப்பகுதியில், கடந்த மாதம் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் இரு குழந்தைகள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு 'டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து குணமடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களில் மீண்டும் அப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் தலைகாட்டியுள்ளது. துரைப்பாக்கம், சூளை மாநகர், முதல் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் மீனா, 5.இச்சிறுமி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கிறாள். இவளுக்கு கடந்த சில நாட்களாக, தொடர் காய்ச்சல் இருந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறாள். இச்சிறுமிக்கு 'டெங்கு' காய்ச்சலாக இருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இச்சிறுமி போல பலர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை புறநகர் பகுதிகளில், சுகாதார துறையினர், தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us