ADDED : டிச 13, 2012 10:43 PM
சென்னை:சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கர்ணன், நேற்று மாரடைப்பால் இறந்தார்.
இவருக்கு வயது, 79. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய, 'கற்பகம்' படம் மூலம், தமிழ்ச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக, கர்ணன் அறிமுகமானார்.
'கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, காலம் வெல்லும் மற்றும் ஜக்கம்மா உட்பட, 25 படங்களை இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர்., நடித்த,'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', கமல் நடித்த, 'சிம்லா ஸ்பெஷல்', ரஜினி நடித்த, 'பொல்லாதவன், சிவப்பு சூரியன்', உட்பட, 150 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
சென்னை, சூளைமேட்டில் வசித்து வந்த கர்ணன், கடந்த சில நாட்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனினின்றி நேற்று இறந்தார்.
இவரது உடல், சூளைமேட்டில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இவருக்கு, சகுந்தலா என்ற மனைவியும், பாமா, தாரா என்ற, இரு மகள்களும் உள்ளனர். கர்ணனின் இறுதிச் சடங்கு இன்று மாலை, 4:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நடக்கிறது.
