ADDED : செப் 29, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
சென்னை: டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், ஐ.சி.எப்., அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. அந்த வகையில், கண்டிகையில் உள்ள வாஹி குரு மைதானத்தில் நடந்த போட்டியில் ஐ.சி.எப்., அணி, யுனிவர்ஸ் ஆர்.சி., அணியை எதிர்த்து போட்டியிட்டது.
‘டாஸ்’ வென்ற ஐ.சி.எப்., அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் அடித்தது.
பின், 236 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய யுனிவர்ஸ் ஆர்.சி., அணி 36 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் ஐ.சி.எப்., அணி அபார வெற்றி பெற்றது.
