/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட்: வேப்பேரி தோல்வி
/
டிவிஷன் கிரிக்கெட்: வேப்பேரி தோல்வி
ADDED : செப் 20, 2024 12:34 AM

சென்னை,டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.
ஐந்தாவது டிவிஷன் 'சி' மண்டல ஆட்டத்தில், பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் வேப்பேரி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பாரதி அணி, 47 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேப்பேரி வீரர் விஜய், ஏழு விக்கெட் சாய்த்தார்.
எளிதான இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய, வேப்பேரி அணி, 41.2 ஓவர்களில் 139 ரண்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாரதி அணி வீரர் நாராயண பிரசாத் 5 விக்கெட் சாய்த்து, வெற்றிக்கு கைகொடுத்தார்.
மற்றொரு போட்டியில், முதலில் பேட் செய்த பி.எஸ்.என்.எல்., அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 213 ரன்கள் அடித்தது.
அடுத்து பேட் செய்த, சென்னை 'பி' அன் 'டி' ஆடிட் அணி, 39 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.