/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளி விற்பனை மந்தம் வியாபாரிகள் குமுறல்
/
தீபாவளி விற்பனை மந்தம் வியாபாரிகள் குமுறல்
ADDED : அக் 30, 2024 12:17 AM
வண்ணாரப்பேட்டை, சென்னையின் வர்த்தக பகுதியான வண்ணாரப்பேட்டை, குட்டி தி.நகர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள எம்.சி., ரோடு, ஜி.ஏ., ரோடு பகுதிகளில், நுாற்றுக்கணக்கான துணி கடைகள் உள்ளன.
கோல்கட்டா, சூரத், மும்பை, டில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, அதிக அளவில் துணிகள் விற்பனைக்கு வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ஆடைகள் பிரத்யேகமாக புது புது டிசைன்களில் கிடைக்கும்.
இந்தாண்டு வியாபாரம், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் குறைந்துள்ளதாக, வியாபாரிகள் குமுறுகின்றனர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்க தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:
வண்ணாரப்பேட்டையில் ஒரு மாத்திற்கு முன்பே தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளதால், கடைகளில் இந்தாண்டு கூட்டம் குறைந்துள்ளது.
கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே துணி கடைகளில் கூட்டம் இருந்தது. பெரிய கடைகளில் கூட வியாபாரம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். மொத்தம் 30 முதல் 40 சதவீத வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைக்காரர்களுக்கு இந்தாண்டு தீபாவளி விற்பனை மந்தமாக இருக்கும் நிலையில், 'ஆன்லைன்' விற்பனை அமோகமாக நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.