ADDED : அக் 07, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மதுரவாயல், வி.ஜி.பி., அமுதா நகர் கூவம் நதிக்கரையோரம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், கழிவு நீர் இணைப்பு குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகளை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் டெண்டர் எடுத்து செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன், தன் ஆதரவாளர்களுடன் சென்ற தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், 'கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என, மிரட்டி உள்ளார்.
மேலும், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், லஞ்சமாக, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவுன்சிலர் ஸ்டாலின், தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.