/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஏற்றி கொன்ற வழக்கு தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு 2வது முறையாக ஜாமின் மறுப்பு
/
கார் ஏற்றி கொன்ற வழக்கு தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு 2வது முறையாக ஜாமின் மறுப்பு
கார் ஏற்றி கொன்ற வழக்கு தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு 2வது முறையாக ஜாமின் மறுப்பு
கார் ஏற்றி கொன்ற வழக்கு தி.மு.க., கவுன்சிலரின் பேரனுக்கு 2வது முறையாக ஜாமின் மறுப்பு
ADDED : ஆக 31, 2025 02:19 AM
சென்னை:அண்ணாநகர் அருகே சொகுசு காரை ஏற்றி, கல்லுாரி மாணவரை கொன்ற வழக்கில், தி.மு.க., கவுன்சிலரின் பேரனின் ஜாமின் மனுவை, இரண்டாவது முறையாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நிதின்சாய், 19; கல்லுாரி மாணவர். இவர், நண்பரின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையால், கடந்த மே 29ம் தேதி, கல்லுாரி மாணவர் சந்துரு என்பவரால், காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சந்துரு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
சரண் இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த சந்துரு, சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும், கவுன்சிலருமான தனசேகரனின் பேரன். ஜாமின் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூன் மாதம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், ஜாமின் கோரி இரண்டாவது முறையாக சந்துரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதாவது:
இறந்தவரின் நண்பர்கள், சந்துரு மற்றும் அவரது நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து உள்ளனர்.
அங்கு சென்றதும், நிதின்சாயும் அவரது நண்பர்களும் பைக்கில் வந்து, சந்துரு, அவரது நண்பர்கள் வந்த கார் மீது கல் எறிந்து, தகராறில் ஈடுபட்டனர்.
தள்ளுபடி தற்காப்புக்காக, காரை வேகமாக இயக்கியபோது, துரதிர்ஷ்டவசமாக, நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதியது.
சந்துரு காரை ஓட்டவில்லை. கல்லுாரி மாணவரான அவர், கடந்த 26 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு வாதிட்டனர்.
அப்போது, போலீசார் தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன், ''மனுதாரர் மற்றும் அவரது நண்பர்கள், இறந்த நிதின்சாய் சென்ற டூ - வீலரை, காரில் துரத்தி சென்றுள்ளனர். காரை மோத செய்ததில் ஒருவர் இறந்துள்ளார்'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''காரை, நண்பர் ஓட்டி சென்றபோதிலும், நிதின்சாய் மீது மோத துாண்டியது மனுதாரர் என்பதால், ஜாமின் வழங்க முடியாது,'' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

