/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் காத்திருந்த தி.மு.க., பிரமுகர் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி பலி
/
ஏ.டி.எம்.,மில் காத்திருந்த தி.மு.க., பிரமுகர் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி பலி
ஏ.டி.எம்.,மில் காத்திருந்த தி.மு.க., பிரமுகர் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி பலி
ஏ.டி.எம்.,மில் காத்திருந்த தி.மு.க., பிரமுகர் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி பலி
ADDED : ஜூலை 24, 2025 12:41 AM

கூடுவாஞ்சேரி, அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியதில், கூடுவாஞ்சேரி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க காத்திருந்த தி.மு.க., பிரமுகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் ராம்பிரசாத், 45; நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 24வது வார்டு தி.மு.க., செயலர்.
நேற்று காலை 6:05 மணிக்கு, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை, சீனிவாசபுரம் சந்திப்பில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க காத்திருந்தார்.
அப்போது, கூடுவாஞ்சேரியிலிருந்து வடபழனி செல்லும் மாநகர பேருந்து, சீனிவாசபுரம் சந்திப்பு 'யு - டர்ன்' வளைவில் திரும்பியது.
அதே நேரத்தில், சித்தாமூரிலிருந்து 'எம் - சாண்ட்' மணல் ஏற்றி, பல்லாவரம் நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரி, மாநகர பேருந்தின் மீது மோதி, பின், ஏ.டி.எம்., மையத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க காத்திருந்த ராம்பிரசாத், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாநகர பேருந்தில் பயணித்த சென்னை, எழும்பூரைச் சேர்ந்த ரவிக்குமார், 68, என்பவருக்கு, தலையில் காயம் ஏற்பட்டு, எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் பலியான ராம் பிரசாத்தின் உடலை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரான செங்கல்பட்டு, மேட்டுக்குப்பம், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார், 40, என்பவரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.