தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தி.மு.க., பிரமுகர் மகன் பலி

தி.மு.க., பிரமுகர் மகன் பலி

தி.மு.க., பிரமுகர் மகன் பலி


ADDED : ஜன 26, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 03:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிமலை:செயின்ட் தாமஸ் மவுன்ட், கன்னியர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து; தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. இவரது மகன் கதிரவன், 34. இவர், கடந்த 15ம் தேதி நள்ளிரவு, மணப்பாக்கத்தில் இருந்து மவுன்ட் நோக்கி, டி.வி.எஸ்., ஜுபிட்டர் ஸ்கூட்டரில் வேகமாக சென்றார்.

நந்தம்பாக்கம், வர்த்தக நிறுவனம் எதிரே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டர் விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கதிரவன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us