/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய மீன் சந்தைக்கு செல்லும்படி வியாபாரிகளுக்கு தி.மு.க., நெருக்கடி
/
புதிய மீன் சந்தைக்கு செல்லும்படி வியாபாரிகளுக்கு தி.மு.க., நெருக்கடி
புதிய மீன் சந்தைக்கு செல்லும்படி வியாபாரிகளுக்கு தி.மு.க., நெருக்கடி
புதிய மீன் சந்தைக்கு செல்லும்படி வியாபாரிகளுக்கு தி.மு.க., நெருக்கடி
ADDED : மே 16, 2025 12:39 AM
சென்னை, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொய்யான தகவல்களை கூறி, சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு அதிகாலை வரும் சரக்கு வாகனங்களை நிறுத்தவிடாமல், போலீசார் நெருக்கடி தருவதாக, மீன் வியாபாரிகள் குமுறுகின்றனர். புதிய மீன் சந்தைக்கு செல்லும்படி, தி.மு.க.,வினர் நெருக்கடி தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில் மிகவும் பழமையான மீன் அங்காடி உள்ளது. இங்கு, மொத்த வியாபாரம் மட்டுமின்றி, சில்லறை வியாபாரமும் நடக்கிறது.
இங்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீன் வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து, அவரவர் பகுதியில் சில்லரை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டால், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினசரி பிழைப்பு நடத்தி வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனக்கூறி, மார்க்கெட்டிற்கு அதிகாலையில் வரும் சரக்கு வாகனங்களை நிறுத்தவிடாமல், 10 நாட்களாக, சிந்தாதிரிப்பேட்டை போலீசார், வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு தி.மு.க.,வினரின் அழுத்தம்தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மீன்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
சிந்தாதிரிப்பேட்டையில், பூங்கா ரயில் நிலையம் அருகே, புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தையை சமீபத்தில், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
ஆனால், கடைகள் அனைத்தும் ஆளும்கட்சி பிரமுகரிடம் இருப்பதால், அங்கு போதிய வசதிகள் இல்லாததாலும், வியாபாரிகள் அங்கு செல்ல முன்வரவில்லை.
மேலும், கட்சியை சார்ந்தவர்களுக்கு கடைகளை ஒதுக்க ஒரு தொகையும், வியாபாரிகளுக்கு ஒரு தொகையும் என, நிர்ணயித்து உள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஒரு மீன் பெட்டிக்கு 50 ரூபாய்; இறால் பெட்டிக்கு, 200 ரூபாயும் வியாபாரிகள் தர வேண்டும் என, நெருக்கடி தருகின்றனர்.
தற்போதுள்ள பழைய மார்க்கெட் வியாபாரிகளாகிய எங்களுக்கு, வியாபாரம் செய்ய விசாலமான இடம் இருப்பதால், நாங்கள் தொடர்ந்து இங்கேயே வியாபாரம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.
பழைய மார்க்கெட் இடிக்கப்போவதாகவும், அங்கு வணிக வளாகம் கட்டப்போவதாகவும், சிலர் வதந்தி கிளப்பிவிட்டனர்.
இதை, மார்க்கெட் உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். காலத்திற்கும் மீன் மார்க்கெட்டாகத்தான் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***