/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கம்பானியன்ஸ் அணி 'சாம்பியன்'
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கம்பானியன்ஸ் அணி 'சாம்பியன்'
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கம்பானியன்ஸ் அணி 'சாம்பியன்'
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கம்பானியன்ஸ் அணி 'சாம்பியன்'
ADDED : ஏப் 17, 2025 11:39 PM
சென்னை,டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு டிவிஷன் போட்டிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், ஆறாவது டிவிஷன் போட்டியில், 'ஏ' பிரிவில் 10 அணிகள்; 'பி' பிரிவில் ஒன்பது அணிகள் 'லீக்' முறையில் மோதின.
கிண்டியில் நடந்த 'ஏ' பிரிவின் கடைசி போட்டியில், கம்பானியன்ஸ் சி.சி., அணி முதலில் பேட்டிங் செய்து, 30 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 228 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, எத்திராஜ் எஸ்.ஏ., அணி, 24.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 113 ரன்கள் மட்டுமே அடுத்து, 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
'பி' பிரிவு போட்டியில், யூத் சென்டர் சி.சி., அணி, 30 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 137 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ஐ.ஏ.எப்., தாம்பரம் அணி, 24 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 138 ரன்களை அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும், குரோம்பேட்டை எம்.ஐ.டி., வளாகத்தில் இறுதிப் போட்டி நடந்தது.
இதில், முதலில் பேட்டிங் செய்த, கம்பானியன்ஸ் சி.சி., அணி, 30 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 287 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ஐ.ஏ.எப்., தாம்பரம் சி.சி., 21.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 149 ரன்களை அடுத்து தோல்வியடைந்தது. இதனால், 138 ரன்கள் வித்தியாசத்தில் கம்பானியன்ஸ் சி.சி., அணி வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை வென்றது.