/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பயன்படுத்தாதீர்: மாநகராட்சி
/
மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பயன்படுத்தாதீர்: மாநகராட்சி
மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பயன்படுத்தாதீர்: மாநகராட்சி
மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பயன்படுத்தாதீர்: மாநகராட்சி
ADDED : ஜூன் 04, 2025 12:21 AM
சென்னை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை இரும்பு பாதை பணிகள் நடப்பதால், ரயில்வே மேம்பாலத்தின் மாற்று பாதையான எர்ணாவூர் மற்றும் மாட்டு மந்தை பாலத்தை பயன்படுத்தும்படி, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
திருவொற்றியூர் மண்டலம், 5வது வார்டு மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையில், இரும்பு பாதை வழியில், 1.42 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
எனவே, தற்காலிகமாக இந்த பாதை மூடப்பட்டுள்ளது. இப்பணிகள், 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
இந்த பாதை மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், சரக்கு ரயில் பெட்டிகளின் தண்டவாளத்தை கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது; அபாயகரமானது.
எனவே, பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம்.
பராமரிப்பு பணிகள் முடியும் வரை, ரயில்வே மேம்பாலத்தின் மாற்று பாதையான எர்ணாவூர் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***