UPDATED : மே 31, 2026 08:07 PM
ADDED : மே 31, 2026 08:02 PM
ராஜமங்கலம்: தனியார் மருத்துவமனையில், ஊழியர்களை தாக்கிய டாக்டரை, போலீசார் நேற்று கைது செய்தனர்
கொளத்துார், சண்முகம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் சுதன், 27. அதே பகுதியில் உள்ள, 'சக்ரா' மருத்துவமனையில், மேலாளராக பணியாற்றி வந்தார்.
மருத்துவமனையின் உரிமையாளரான கொரட்டூரைச் சேர்ந்த டாக்டர் அமுதகுமார், 58, என்பவர், மருத்துவமனை ஊழியர்களை, கடந்த 25ம் தேதி திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதை, மேலாளரான லட்சுமணன் சுதன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த டாக்டர் அமுதகுமார், அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில், லட்சுணன் சுதன் புகார் அளித்தார். அதில், தன்னை தாக்கி டாக்டர் அமுதகுமார், அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், டாக்டர் அமுதகுமாரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
