ADDED : அக் 30, 2024 07:25 PM
''கவுன்சிலர் செம்மொழியின் கேள்விக்கு, 'மெரினா கடற்கரையில், விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்' என, மேயர் பிரியா பதில் அளித்துள்ளார்.
கடந்த 2022 அக்., 29ல், இதே கேள்வியை, அதே கவுன்சிலர் கேட்ட போதும், இதே பதிலைதான் மேயர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின், 2023ல், 'பர்வத்மாலா' திட்டத்தில், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை ரோப் கார் வசதி அறிமுகம் செய்யப்படும் என, மத்திய போக்குவரத்து துறை அறிவித்தது.
இதற்காக, தமிழக அதிகாரிகள், பொலிவியா நாட்டில், ரோப் கார் வசதி செயல்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளனர். இத்திட்டத்திற்கு, 60 சதவீதம் நிதியை தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை நிறுவனம் வழங்குகிறது.
இந்த திட்டத்திற்கு பல்வேறு துறைகளின் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள், மாநில அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டம் குறித்து மேயருக்கு தெரியுமா; தெரிந்தும் பேசாமல் இருப்பது ஏன்? மத்திய அரசு திட்டம் என்பதால் மறைக்க முயற்சிக்கிறாரா என்பதை விளக்க வேண்டும்.
- நாராயணன் திருப்பதி,
தமிழக பா.ஜ., துணைத்தலைவர்.

