/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டான்பாஸ்கோ வாலிபால் லயோலா கல்லுாரி முதலிடம்
/
டான்பாஸ்கோ வாலிபால் லயோலா கல்லுாரி முதலிடம்
ADDED : ஆக 09, 2025 12:30 AM

சென்னை, மாநில அளவிலான டான்பாஸ்கோ கோப்பைக்கான வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி முதலிடத்தை பிடித்தது.
சேக்ரட் ஹார்ட் கல்லுாரி சார்பில், 36வது டான்பாஸ்கோ கோப்பைக்கான வாலிபால் போட்டி, திருப்பத்துாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்தது. போட்டியில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, எட்டு அணிகள், 'லக்' மற்றும் நாக் அவுட் முறையில் மோதின.
அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை லயோலா கல்லுாரி மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 25 - 22, 25 - 23, 25 - 17 என்ற புள்ளிக்கணக்கில், லயோலா கல்லுாரி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியை, லயோலா கல்லுாரியின் முதல்வர் லுாயிஸ் அரோக்கியராஜ், செயலர் தாமஸ் அலக்ஸ், உடற்கல்வி இயக்குனர் பழனிவேல் உள்ளிட்டேர் பாராட்டினர்.