தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில் பாதையில் பிளாஸ்டிக்கை எரிக்காதீர்

ரயில் பாதையில் பிளாஸ்டிக்கை எரிக்காதீர்

ரயில் பாதையில் பிளாஸ்டிக்கை எரிக்காதீர்


ADDED : மார் 21, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ரயில் பாதைகள் அருகில் குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்கை எரிக்க வேண்டாம்; அது ஆபத்தானது' என, சென்னை ரயில் கோட்டம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை ரயில்கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

சமீபகாலமாக, ரயில் பாதைகளுக்கு அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக், காய்ந்த செடிகளை எரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய செயல்கள், ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாகின்றன.

குப்பை கழிவுகளை எரிப்பதால் உருவாகும் அதிகப்படியான வெப்பம் மற்றும் புகை, ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின் கம்பிகளையும், நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

இது, ரயில் சேவைகள் பாதிக்கவும், பயணியரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, ரயில் பாதைகள் அருகில் தீ விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவது ரயில்வே சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us