/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு தானம் தந்து விடாதீர்: நீதிபதி அறிவுரை
/
பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு தானம் தந்து விடாதீர்: நீதிபதி அறிவுரை
பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு தானம் தந்து விடாதீர்: நீதிபதி அறிவுரை
பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு தானம் தந்து விடாதீர்: நீதிபதி அறிவுரை
ADDED : ஆக 18, 2025 03:04 AM

சென்னை:''வரும் காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு தானம் கொடுத்து விடாதீர்,'' என, பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி நிறைவு விழாவில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.
நங்கநல்லுார், பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ - மாணவியரின் அறிவியல், கலை மற்றும் கைவினை கண்காட்சி - -2025யின் நிறைவு விழா நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மேகாலயா உயர் நீதிமன்ற, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வைத்தியநாதன் பங்கேற்றார். பொதுத்தேர்வில் சிறப்பிடம், கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தந்த மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, அவர் பேசியதாவது:
கற்றல் என்பது வகுப்பறையோடு முடிந்துவிடாது; வாழ்நாள் முழுதும் தொடரும். நாம் எந்த ஒரு பிரச்னையை கண்டும் பயந்து விடக் கூடாது. நம்மால் முடியாது என்ற ஒன்றே கிடையாது. நினைத்ததை அடைய கடின உழைப்பு தேவை.
மொபைல் போன் தொலை பேசியாகவும் உள்ளது; தொல்லை பேசியாகவும் மாறுகிறது. குழந்தைகளை சமாதானப்படுத்த மொபைல் போன் கொடுப்பது தவறு. அதன் வாயிலாக பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பெற்றோர் சண்டையிடுவது, பிள்ளைகளின் கல்வியை மட்டுமல்ல, மனநிலையையும் பாதிக்கும்.
மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வரும் காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு தானம் கொடுத்து விடாதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் டாக்டர் வாசுதேவன், பள்ளி துணை தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா, முதல்வர்கள் பாலா, சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.