மகளிர் பஸ்களை நிறுத்தாதீர்! அதிகாரிகளுக்கு எம்.டி.சி., உத்தரவு
மகளிர் பஸ்களை நிறுத்தாதீர்! அதிகாரிகளுக்கு எம்.டி.சி., உத்தரவு
ADDED : மார் 21, 2026 09:03 PM
சென்னை: 'மகளிர் பேருந்துகள் உட்பட அனைத்து மாநகர பேருந்துகளையும், முழுமையாக இயக்க வேண்டும்; எதையும் நிறுத்தக்கூடாது' என, கிளை மேலாளர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, எம்.டி.சி., நிர்வாகம், கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சென்னையில் பயணியர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பேருந்துகள் ஏதும் ரத்து செய்யாமல், தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மகளிர் பேருந்துகளை நிறுத்தக்கூடாது; தடத்தில் முழு சேவையாக இயக்க வேண்டும் என, தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் சில பணிமனைகளில், அட்டவணைப்படி முழுமையாக இயக்காமல், நடையிழப்பு செய்வதால், பயணியருக்கு சிரமம் ஏற்படுவதோடு, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அவப்பெயரும், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
எனவே, பயணியருக்கு சேவை பாதிப்பு ஏதும் இன்றி, பேருந்துகளை முழு சர்வீசாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
