/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவை இளம் மருத்துவர்களுக்கு முன்மாதிரி
/
டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவை இளம் மருத்துவர்களுக்கு முன்மாதிரி
டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவை இளம் மருத்துவர்களுக்கு முன்மாதிரி
டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவை இளம் மருத்துவர்களுக்கு முன்மாதிரி
ADDED : மார் 16, 2025 12:15 AM

சென்னை, :அடையாறு கேன்சர் மருத்துமனையின் மறைந்த முன்னாள் தலைவர் சாந்தாவின் 4வது ஆண்டு நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது.
இதில், 'சுயமுன் சேவை' என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற பொது மருத்துவர் சீனிவாசன், 98, பேசியதாவது:
நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாந்தா, மருத்துவ சேவையில் சுயநலம் இல்லாமல் செயல்பட்டார். மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றி, பெரும் முயற்சியில் முத்துலட்சுமி ரெட்டி துவங்கிய கேன்சர் மருத்துவமனையில் இணைத்து கொண்டு, அவர் காலம் முழுதும் தன்னலம் கருதாமல் பணிபுரிந்தார்.
பணம் தேவை தான், ஆனால் அதைவிட சேவை முக்கியம் என வாழ்ந்தவர். உயரிய சிகிச்சை முறையை முறையாக கற்றுக்கொண்டு, இறப்பின் வாசலை நோக்கி சென்ற உயிர்களை காத்தவர். கேன்சரை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குணப்படுத்தும் நோய் தான் என, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
இவரின் சேவையை உலக அளவிலான மருத்துவ துறைகள் ஆச்சர்யத்துடன் பார்த்தது. சாந்தாவை முன்மாதிரியாக எடுத்து இளைய தலைமுறை மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கேன்சர் மருத்துவமனையில் 2023 - 24ம் ஆண்டு படிப்பில் முதலிடம் பிடித்த, மாணவ - மாணவியருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் 109 ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்காக, 20.73 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல, 20 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 24 ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், ராஜா, ேஹமந்த்ராஜ், கல்பனா, சுவாமிநாதன் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.