/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரிகளால் வடிகால் உடைப்பு நங்கநல்லுாரில் விபத்து அபாயம்
/
லாரிகளால் வடிகால் உடைப்பு நங்கநல்லுாரில் விபத்து அபாயம்
லாரிகளால் வடிகால் உடைப்பு நங்கநல்லுாரில் விபத்து அபாயம்
லாரிகளால் வடிகால் உடைப்பு நங்கநல்லுாரில் விபத்து அபாயம்
ADDED : பிப் 22, 2024 12:31 AM

நங்கநல்லுார், ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் 40வது தெருவில், தனியார் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்கான பொருட்களை, கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன், லோடு ஏற்றி வந்த லாரி ஒன்றின் பாரம் தாங்காமல், 22வது தெரு மற்றும் 40வது தெருவில், மழைநீர் வடிகால் உடைந்தது. இதனால், அவ்வழியே வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்தும், இதுவரை சீரமைக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
கனரக வாகனங்களால், மழைநீர் வடிகால் உடைந்து பல நாட்கள் ஆகின்றன.
இதனால், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
மேலும், கட்டுமான பொருட்கள் சாலையில் போட்டு ஆக்கிரமிக்கின்றனர். அதையும் அகற்றி, தடையற்ற போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.