
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருகம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் 128வது வார்டில் தாராசந்த் நகர் 3வது தெரு உள்ளது. இத்தெருவில் பருவமழையின்போது மழைநீர் தேங்குவது வாடிக்கை. இதையடுத்து, கடந்த 2022ல், புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் அச்சாலை வழியாக கனரக வாகனம் சென்றபோது, மழைநீர் வடிகால் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் கட்டுமானத்தின் தரம் குறித்தும், பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்தும், நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, அப்பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் வடிகால் பள்ளத்தை சீர் செய்தனர்.

